கோலாலம்பூர், மே 19- இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிகே ஆர் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு கூட்டங்களில் தாம் கலந்து கொண்டு அவற்றைத் தொடக்கி வைக்க இயலாது என்று துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி தலைவருக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அந்தக் கடிதம் இப்போது உறுப்பினர்களிடையே பேசு பொருளாக மாறி தமக்கு சிறுமையை ஏற்படுத்தி இருப்பதாக ரபிஸி குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தைத் தாம் தலைவருக்கு மட்டுமே அனுப்பிய வேளையில், அதன் நகலானது எல்லா உறுப்பினர்களின் கைகளிலும் இருப்பது வேண்டுமென்றே செய்யப்பட்ட மோசமான செயலென அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரபிஸியின் இந்தச் செய்கையானது கட்சியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கட்சியில் நல்லிணக்கம் தொடர்வதாகவும் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


