பட்டர்வொர்த், மே 21-கேளிக்கை விடுதியின் பாதுகாவலர் ஒருவரைக் கொலை செய்து தலைமறைவாக இருந்த ஊய் சின் லெங் என்ற நபர் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்.
ஊய், இன்னும் தேடப்படும் நண்பரோடு சுங்கை டுவா, தாமான் டேசா முர்னியில் உள்ள கேளிக்கை விடுதியில் 2013 ஜனவரி 24ஆம் தேதி காலை 5.25 மணியளவில், பவுஸி ஹுசேய்ன்(24) என்பவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் செய்த பின்னர், அதிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த ஊயின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30முதல் 40 ஆண்டு வரையிலான சிறை தண்டனை மற்றும் 12 பிரம்படியும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.


