Homeசமூகம்சமூகம்தொழில் உரிமம் பெறாத அந்நிய மருத்துவர்கள் கைது! 

தொழில் உரிமம் பெறாத அந்நிய மருத்துவர்கள் கைது! 

ஷா ஆலம், மே 21-  மருத்துவத் தொழில் உரிமம் பெறாத அந்நிய மருத்துவர்கள் அறுவர் குடிநுழைவு இலாகாவின் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

23 வயது முதல் 57 வயது வரையிலான அவர்கள் சுங்கை பூலோ, ஷா ஆலம் மற்றும் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள கிளினிக்குகளில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

அந்த மருத்துவர்கள் தொழில் செய்ய உரிமம் பெறாமல் நோயாளிகள் மீது பரிசோதனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் பாகிஸ்தானியர் ஆண் ஒருவர், 2 பாகிஸ்தானிய பெண்கள், மூன்று மியன்மார் பெண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

 

spot_img

latest articles

explore more