ஜோர்ஜ் டவுன், மே 22-
2019ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் கருவூல இருப்பு 1,150 கோடி ரிங்கிட்டாக இருந்த வேளையில், 2024ஆம் ஆண்டு அது வெறும் 5 கோடி ரிங்கிட்டாகக் குறைந்தது எப்படி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், இருப்பிலிருந்து 1,100 கோடி குறைந்ததற்கான காரணத்தையும் மத்திய அரசிடமிருந்து 10 கோடி ரிங்கிட் முன்பணம் கோரியிருப்பதன் காரணத்தையும் முதலமைச்சர் செள கோன் இயோ விளக்கம் அளிக்க வேண்டுமென குவான் எங் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை என்றும் அதிகமான நிதி விரயமும் நிர்வாகத் திறனும் இல்லாமல் மாநிலம், மத்திய அரசிடமிருந்து முன் பணம் கோரியிருப்பது தவறான முன்னுதாரணம் என்றும் குவான் எங் சாடினார்.


