Homeஅரசியல்தெங்கு ஸப்ருலின் கட்சி விலகல் கடிதத்தை அம்னோ பெறவில்லை! -அஷ்ரப்

தெங்கு ஸப்ருலின் கட்சி விலகல் கடிதத்தை அம்னோ பெறவில்லை! -அஷ்ரப்

கோலாலம்பூர், மே, 30-
கட்சி பொறுப்புகளிலிருந்து, செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை அம்னோ இன்னும் பெறவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் அஷ்ரப் வஜ்டி டுசூக்கி தெரிவித்தார்.

பி.கே.ஆரில் இணையும் நோக்கில், டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதை, அம்னோ கடுமையாக கருதுகின்றது.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலுள்ள எந்தவொரு கட்சியும் வெறுமனே இதர கட்சிகளின் உறுப்பினர்களை அவர்களது கட்சியினுள் சேர்த்துக்கொள்வது ஏற்புடையது அல்ல.

அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையிலான ஒற்றுமையை அது சீர்க்குலைக்கும்.

அத்துடன், தோழமை, நேர்மை ஆகியவைக் குறித்து, கடைநிலை உறுப்பினர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை விதைக்குமென, டாக்டர் அஷ்ரப் வஜ்டி டுசூக்கி அறிக்கையொன்றில் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more