Homeஅரசியல்என்ன செய்ய வேண்டும் என்பது அன்வாருக்கு தெரியும்! யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது! -அந்தோணி லோக்

என்ன செய்ய வேண்டும் என்பது அன்வாருக்கு தெரியும்! யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது! -அந்தோணி லோக்

சிரம்பான், மே 31-

நடப்பு அரசாங்கத்தில், இரு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள விவகாரத்தில், என்ன செய்ய வேண்டும் என்பது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்கு தெரியும்.

ஆகையால், அவருக்கு எத்தரப்பும் அழுத்தம் வழங்கக்கூடாது என டி.ஏ.பி. கட்சி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

அமைச்சரவையில் ஒருவரை நியமிப்பது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.

பல்வேறு பரிசீலனைகள் செய்து, காலியாகியிருக்கும் இடங்களுக்கு அவர் உரியவர்களை நியமிப்பார் என போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் கூறினார்.

அண்மையில், டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நிக் நஸ்மி நி அஹ்மட் இயற்கைவளம், நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகும் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியிருந்தனர்.

அவ்விருவருக்கும் மாற்றாக, புதியவர்களை பிரதமர் விரைந்து நியமிக்க வேண்டுமென முன்வைக்கப்படும் பரிந்துரைகள் தொடர்பில், அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் அவ்வாறு கருத்துரைத்தார்.

spot_img

latest articles

explore more