கோலாலம்பூர், ஜூன் 2-
ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணியை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள்.
டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹானுக்கு, அந்த சவாலை விடுத்துள்ளார், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே.
மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் ம.சீ.ச. பேசி வருவதாக, ஷாரேட்ஸான் சாடியதைச் சுட்டிக்காட்டி, அவர் அந்த சவாலை விடுத்தார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில், தேசிய முன்னணி ஒரு கூட்டணியாக இணைந்துள்ளது. தங்களது கூட்டணியில் ம.சீ.ச.வும் ஓர் அங்கம்.
ஆகையால், ம.சீ.ச.வை மட்டும் தாங்கள் விரட்ட நினைத்தால், ஒட்டுமொத்தமாக தேசிய முன்னணியை, நடப்பு அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரும்படி டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால், ஷாரேட்ஸானுக்கு வலியுறுத்தினார்.
கேள்வியெழுப்பும் போது, மற்றவர்கள் மீது பழியைப் போடுவது;
பதிலையும் ஆணவத்துடன் வழங்குவது;
இத்தகையப் போக்கை கொண்டுள்ள ஷாரேட்ஸானுக்கு தமது சவாலை ஏற்கும் திராணி உள்ளதா எனவும் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் கேள்வியெழுப்பினார்.


