கோலாலம்பூர், ஜூன் 2-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லிக்கு, தாம் நியமன துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாக கூறப்படுவது குறித்து பி.கே.ஆர் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார் கருத்துரைக்க மறுத்துள்ளார்.
நண்பருடன் பேசப்பட்ட விவகாரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பி.கே.ஆரில், உறவுகளை இணைக்கும் பாலமாக இருக்கவே, தாம் விரும்புவதாக கூறினார்.
கடந்த மே மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் துணைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தலில், தோல்வி கண்டிருந்த தமக்கு, நூருல் இசா நியமன அடிப்படையிலான துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாகவும் அதனை தாம் நிராகரித்துவிட்டதாகவும் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி இதற்குமுன்பு கூறியிருந்தார்.


