புத்ரா ஜெயா, ஜூன் 2-
கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 மில்லியன் வெள்ளி சட்டவிரோத முதலீடுகளில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு டான்ஸ்ரீ சம்பந்தப்படுள்ளதாகவும் மேற்கண்ட பணத்தை அவரும் அவரது மனைவியும் சொத்து, விலையுயர்ந்த சொத்து, மனைகள் வாங்கியதோடு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் முதலீடு செய்திருப்பதாகவும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இது சம்பந்தமாக டான்ஸ்ரீயின் 4.5 மில்லியன் வெள்ளி பெறுமான 14 வங்கிக் கணக்குகளும் 33 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், 7.86 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள விலையுயர்ந்த கார், 3 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள மோஸ்தர் கைப்பைகள், 6 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள தங்க நகைகள், 24.5 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள சொத்துகள் முதலியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீ தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் குறிப்பிடப்படாத நோய்க்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்தார்.


