Homeஅரசியல்ஒரு வழக்குக்கு விலக்களிக்கப்பட்டால், இதர வழக்குகளுக்கும் வழங்கப்படலாம்! - துன் மகாதீர்

ஒரு வழக்குக்கு விலக்களிக்கப்பட்டால், இதர வழக்குகளுக்கும் வழங்கப்படலாம்! – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10-

பிரதமருக்கு வழக்கிலிருந்து விலக்கை வழங்கும் சட்டப்பிரிவு உள்ளதாக கூறி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சட்டநடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிப்பதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மட் குற்றம் சாட்டினார்.

அன்வார் உண்மையில் குற்றமற்றவராக இருந்தால், ஏன் விசாரணை செயல்முறையை எதிர்கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.

தாம் குற்றமற்றவர் என்று நம்பினால், நீதிமன்றமே அந்த முடிவை எடுப்பது நல்லது.

ஆனால், அதைத் தவிர்க்க முயற்சிக்கப்பட்டால், ஏதோ மறைக்கப்படுகிறது என்ற எண்ணத்தை அது உருவாக்குகிறது என துன் மகாதீர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

விலக்களிப்பு பெறுவது ஒரு வழக்குக்கு மட்டும் பொருந்துமா அல்லது எதிர்காலத்தில் எழக்கூடிய பிற வழக்குகளையும் உள்ளடக்குமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

ஒரு வழக்குக்கு விலக்களிப்பு வழங்கப்பட்டால், மற்ற வழக்குகளுக்கும் அது வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதல்லவா? அப்படியானால், பிரதமர் ஒருவரைக் கொலை செய்தாலும் கூட பரவாயில்லை என துன் மகாதீர் கிண்டலாகக் கூறினார்.

இந்நாட்டில் சட்டத்தை செயல்படுத்துவது நியாயமற்றதாகவும், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ முறையிலும் உள்ளது. உயர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சிலர், மேல்முறையீட்டு முடிவுக்காகக் காத்திருப்பதாகக் கூறி இன்னும் தண்டனையை அனுபவிக்கவில்லை.
ஆனால் அந்த மேல்முறையீடு மறுக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

மாறாக, மற்றவர்களுக்கு, இன்னும் விசாரணை நடைபெறாத நிலையில், விசாரணைக் காலத்திலேயே பல்வேறு அழுத்தங்கள், மாதக்கணக்கில் தடுப்பு, சொத்துக்கள் பறிமுதல், குடும்பத்தினருக்கு அழுத்தம் முதலானவை வழங்கப்படுகின்றன.

சுருக்கமாக கூறினால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், தண்டனை விதிக்கப்படுவதாக துன் மகாதீர் கூறினார்.

spot_img

latest articles

explore more