கோலாலம்பூர், ஜூன் 13-
பிரதமர் அன்வார் இப்ராஹிம்,
பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, இயற்கை வளம் நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவ்விருவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்து விடுப்பு கோரியிருந்தாலும், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் விடுப்பை மட்டுமே அனுமதித்ததாக அன்வார் விளக்கினார்.
மேலும், அமைச்சரவையிலிருந்து அவ்விருவரையும் விடுவிப்பதற்கு முன், தங்கள் முடிவு குறித்து கவனமாக சிந்திக்கவும் தாம் நேரம் அளிப்பதாக பிரதமர் கூறினார்.
“… அவர்கள் சிந்திக்கட்டும்… அவ்விருவரும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். பதவி விலகல் கடிதம் ஏற்கனவே பெறப்பட்டாலும், நான் இன்னும் அவர்களின் பதவி விலகலை ஏற்கவில்லை,” எனவும் அன்வார் குறிப்பிட்டார்.


