Homeஅரசியல்பொருளாதார அமைச்சின் அலுவலகத்தை முழுமையாக காலி செய்தார் ரஃபிஸி!

பொருளாதார அமைச்சின் அலுவலகத்தை முழுமையாக காலி செய்தார் ரஃபிஸி!

புத்ராஜெயா, ஜூன் 13-

பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் கடிதத்தை இதற்கு முன்பு சமர்ப்பித்திருந்த டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, அமைச்சின் அலுவலகத்தை தற்போது முழுமையாக காலி செய்துள்ளார்.

நேற்றும் இன்றும் கடைசி முறையாக அலுவலகத்திற்குச் சென்றதாக கூறிய அவர், அமைச்சில் தமக்கு பக்கபலமாக இருந்த அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

முந்தைய தொழில்களை விட்டுவிட்டு, கொள்கை வகுக்கும் அதிகாரிகளாக தம்முடன் பணியாற்ற தாம் அவர்களை வற்புறுத்தியதாகவும் அவர்களும் தம்முடன் பணியாற்ற வந்ததாகவும் ரஃபிஸி கூறினார்.

மிளகாய் பயிரிடும் திட்டம் முதல் செமிகண்டக்டர் வரை, தொடக்க நிறுவனங்களின் சுற்றுச்சூழல், முன்னேற்றகர ஊதியம், 13ஆவது மலேசியத் திட்டம் என தாம் முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் செயலாக்கம் காண்பதில், அவர்களது பங்களிப்புகள் உள்ளன.

தற்போது, தாம் பொருளாதார அமைச்சர் பொறுப்பைத் துறந்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளுக்கு திரும்புவதாகவும் அவர்களுக்கு நன்றிக் கூறிக்கொள்வதாகவும் ரஃபிஸி குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more