Homeசமூகம்யாரென்று பார்ப்பதில்லை; குடிக்க நீரை வழங்கி வலைத்தளவாசிகளின் பாராட்டைப் பெறும் இந்திய மாது.

யாரென்று பார்ப்பதில்லை; குடிக்க நீரை வழங்கி வலைத்தளவாசிகளின் பாராட்டைப் பெறும் இந்திய மாது.

கோலாலம்பூர், ஜூன் 16-

வீட்டின் முன்பு யார் என்ன வேலை செய்துக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. அவர்களின் தாகத்தைப் போக்க, நீரை வழங்க வேண்டும் என்பது கணவரின் உத்தரவு.

அதை இன்றளவும் கடைப்பிடித்துவரும் இந்திய மாது ஒருவரை வலைத்தளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளரோ அல்லது பொருள் அனுப்பும் சேவையில் உள்ளவரோ. அவர் எந்த இனம் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.

கணவரின் பேச்சுக்கு மதிப்பளித்து அம்மாது, எவ்வித பிரதிபலனையும் பார்க்காமல், ஜூஸை தயாரித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றார்.

அண்மையில், அம்மாதுவிடம் ஜூஸை வாங்கி அருந்திய மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரது ஒப்பற்ற நல்லுள்ளம் குறித்து சமூக ஊடகத்தில் காணொலியுடன் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவு வைரலாகிவரும் வேளை, வலைத்தளவாசிகள் அந்த இந்திய மாதுவைப் பாராட்டி வருகின்றனர்.

மூலம்:
ரொஸ்லினா ரொஸ்மான், ட்ரேட் ஊடகம்

spot_img

latest articles

explore more