Homeகுற்றவியல்2024 இணையப் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்! -அஸாலினா

2024 இணையப் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்! -அஸாலினா

பாங்கி, ஜூன் 16-

நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பேரரசரின் ஒப்புதலைப் பெற்ற 2024 இணையப் பாதுகாப்புச் சட்டம், நாட்டில் கூடிய விரைவில் அமல்படுத்தப்படுமென பிரதமர்துறையின் கழகச் சீர்த்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

தற்போது அச்சட்டம் அரசிழலில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்ஸில் கையெழுத்திடவுள்ள அதிகாரப்பூர்வ அமலாக்க தேதிக்காக காத்திருப்பதாக, அவர் கூறினார்.

தொடர்பு அமைச்சர் அமலாக்க உத்தரவில் கையெழுத்திட்டவுடன் அச்சட்டம் நடைமுறைக்கு வரும், இதன்மூலம் இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ், இலக்கவியல் தள வழங்குநர்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு சார்ந்த பொறுப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும், இணையத்தில் நிகழும் தீங்குகளை வகைப்படுத்த, இணையப் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து மன்றம் ஒன்று நிறுவப்படும் என இன்று நடைபெற்ற சட்ட விவகாரங்கள் பிரிவின் மாதாந்திர கூட்டம் மற்றும் தேசிய சட்ட கல்வி மையத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழாவுக்கு பின்னர், டத்தோ ஸ்ரீ அஸாலினா செய்தியாளர்களிடம் பேசினார்.

இணையப் பாதுகாப்பு சட்டம், இலக்கவியல் தளங்களின் பாதுகாப்பு மற்றும் கடப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தாலும், சிறார் தொடர்பான எந்தவொரு விவகாரங்களிலும், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தை பின்பற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அஸாலினா கூறினார்.

spot_img

latest articles

explore more