கோலாலம்பூர், ஜூன் 17-
மறைந்த ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் மறைவுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
டத்தோ ஸ்ரீ பழனிவேல் நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருந்ததாகவும் 1990ஆம் காலக்கட்டம் தொடங்கி, அரசாங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன் இந்நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை வழங்கியுள்ளதாக பிரதமர் புகழாரம் சூட்டினார்.
அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல், கடந்த ஒரு வார காலமாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மணி காலை மணி 8 அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


