கூச்சிங், ஜூன் 17 –
இவ்வாண்டு மே 14ஆம் தேதி 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காரை மோதியதில் அதில் பயணித்த ஐவர் மரணமடைந்தனர்.
இந்தச் சம்பவமானது கூச்சிங் ஜாலான் தியோ குய் செனங் (ஜாலான் ஸ்துதோங் பாரு) எனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. .
அந்த விபத்திற்கும் ஐவர் மரணமடைந்ததற்கும் தாமே காரணம் என்று அவன் ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறுவனுக்கு 1,500 ரிங்கிட் அபராதத்தையும் 5 ஆண்டு காலம் அவன் ஹென்றி கர்னி சீர்திருத்தப் பள்ளியில் இருக்க வேண்டுமென்றும் மாஜிஸ்திரேட் லிங் ஹுய் சுவான் தீர்ப்பளித்தார்.
இதற்கு முன்னர், தமது இளவயது மகனை முறையாகக் கண்காணிக்கத் தவறிய குற்றத்திற்காக சிறுவனின் தந்தைக்கு எதிராக மே 14ஆம் தேதி 15,000 ரிங்கிட் அபராதத்தோடு 12 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.


