Homeஅரசியல்பி.கே.ஆர். புதிய தலைமைப் பதவிகளை அறிவித்தது

பி.கே.ஆர். புதிய தலைமைப் பதவிகளை அறிவித்தது

கோலாலம்பூர், ஜூன் 21-

பி.கே.ஆர் கட்சியின் புதிய தலைமைப் பதவிகளை தகவல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் அறிவித்தார்.

இன்று நடைபெற்ற அரசியல் பிரிவு மற்றும் மத்திய தலைமைக் கூட்டத்தில், துணைத்தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரும் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் கூட்டு தேர்தல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஃபுஸியா சாலே மற்றும் வில்லியம் லியோங் முறையே பொதுச் செயலாளர், பொருளாளராக தொடர்ந்து பதவி வகிப்பார்கள். முஸ்தஃபா சக்முட் சபா பி.கே.ஆர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பிற தலைவர்களின் பங்களிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சபா மாநில தேர்தலுக்கான தயார்நிலை மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

spot_img

latest articles

explore more