கோலாலம்பூர், ஜூன் 26-
அரசியலில் தற்போதைக்கு தாம் மறுபிரவேசம் செய்யப்போவதில்லை; குறுகிய கால ஓய்வை எடுக்கப்போவதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசிய அவர், இதுவரை நாட்டின் நலனுக்காக தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கி வைத்திருந்ததாகவும் இனி, தனிப்பட்ட வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகவும் கூறினார்.
“அரசியலிலிருந்து நான் பின்வாங்கவில்லை, மாறாக புதிய திட்டங்களுடன் மீண்டும் வருவேன். இந்த இடைவெளி தற்காலிகமானது மட்டுமே. கூடிய விரைவில் புதிய இலக்கையும் திட்டங்களையும் அறிவிப்பேன்” என்றும் சைட் சாடிக் தெரிவித்தார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு, பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மாடா நிதியில் முறைகேடு புரிந்ததாக சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளிலிருந்து சைட் சாடிக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலையுடன் விடுவித்தது.


