கோலாலம்பூர், ஜூன் 30-அண்மையில் வங்காள தேசத்தில் குண்டு வைத்து நாச வேளையில் ஈடுபட்டிருந்த அல்-கயிடா, ஹர்காட்-உல்-இஸ்லாமி வங்காளதேச பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகப் போலீஸ் படையின் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மே 23 முதல் ஜூன் 11ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கு, சிரம்பான் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 36 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் விசாவில் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் காலிட் குறிப்பிட்டார்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது வழக்கு தொடரப்படுவதோடு 16 பேர் வங்காளதேசத்திற்கு நாடு கடத்தப் பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது விசாரணை தொடர்வதாகவும் அவர் விவரித்தார்.
-பொன் முனியாண்டி


