கோலாலம்பூர், ஜூன் 30-
மறைந்த துன் டைய்ம் ஸைனுடின் அவரின் குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் பெயர்களில் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஜெர்சி தீவு, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அறிவிக்கப்படாத சொத்துகள் இருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.
அந்தச் சொத்துகள் யாவும் வருமான வரிக் கணக்கில் காட்டப்படவில்லை என்பதால் அவற்றைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் பிரிட்டனில் உள்ள டாய்மின் மனைவிக்குச் சொந்தமான 758,2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளை எம்ஏசிசி முடக்கியது குறிப்பிடத்தக்கது.
-பொன் முனியாண்டி


