Homeகுற்றவியல்விஇபி அமல்: முதல் 1 மணி நேரத்திற்குள் 10 சிங்கை வாகனமோட்டிகளுக்கு அபராதம்!

விஇபி அமல்: முதல் 1 மணி நேரத்திற்குள் 10 சிங்கை வாகனமோட்டிகளுக்கு அபராதம்!

ஜொகூர் பாரு, ஜூலை 1-

வாகன நுழைவு அனுமதி(விஇபி) அமல்படுத்தப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள் 10 சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனை சாலை போக்குவரத்து துறையின்  தலைமை இயக்குநர் அடி ஃபாட்லி ரம்லி தெரிவித்தார்.

ஜொகூர் – சிங்கப்பூர் எல்லையில் வாகன நுழைவு அனுமதி இன்று ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு அமலுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் 29ஆம் தேதி வரை 2,48,000க்கும் அதிகமான சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் இதற்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இவர்களில் 17 விழுக்காட்டு வாகனமோட்டிகள் இன்னும் தங்கள் அனுமதியைச் செயல்படுத்தவில்லை என்றார் அடி ஃபாட்லி.

இவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

கோஸ்வே மற்றும் செகண்ட் லிங்க் ஆகிய எல்லைச் சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கைகள் வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஜொகூர் பாரு, சுல்தான் இஸ்கந்தர் கட்டிட சுங்க சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் விஇபி இல்லாத கார்களை நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

 

spot_img

latest articles

explore more