பயான் பாரு, ஜூலை 1-
நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5 மில்லியன் பேரின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் பிகேஆரின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களிடையே பயான் பாருவில் உள்ள ராஜா இன் எனும் ஹோட்டலில் நடைபெற்ற ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமையைக் காக்கவும் அவர்களுக்கு அநியாயம் இழைப்போரிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும் தாம் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சே கியோங்குடன் கலந்தாய்வு நடத்தப் போவதாக இஸ்ஸா அன்வார் சொன்னார் .
-பொன் முனியாண்டி


