Homeகுற்றவியல்பட்டர்வொர்த்தில் பள்ளி அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலால் பரபரப்பு.

பட்டர்வொர்த்தில் பள்ளி அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலால் பரபரப்பு.

பட்டர்வொர்த், ஜூலை 1-

பினாங்கின் பட்டர்வொர்த், சுங்கை நியோர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றுக்கு அருகே இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு சக்கர இயக்க வாகனத்தை ஓட்டிச் சென்ற 40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் மரணத்தின் பிடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாலை 5:40 மணியளவில் பள்ளியில் இருந்து தமது பிள்ளையை அழைத்து வருவதற்காக அவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அடையாளம் தெரியாத இரு நபர்கள், அவரது வாகனத்தின் ஓட்டுநர் பக்கத்தை நெருங்கி வந்ததோடு, பக்கவாட்டு கதவு கண்ணாடியை, அருகிக் இருந்தவாறு சுட்டனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிழற்ப்படங்களின்படி, வாகனத்தின் ஓட்டுநர் பக்க கண்ணாடியில் குறைந்தது ஐந்து துப்பாக்கிக் குண்டுகளின் தடயங்கள் தென்படுகின்றன.

ஆனால், இந்தக் கொடூரத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு உடலில் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இந்த துணிகர துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் தொடர்பில், பட்டர்வொர்த் போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படவில்லை.

அச்சம்பவம் அப்பகுதிவாழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

spot_img

latest articles

explore more