Homeகுற்றவியல்படகு கவிழ்ந்த சம்பவம்; படகோட்டியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு

படகு கவிழ்ந்த சம்பவம்; படகோட்டியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு

பெசூட், ஜூலை 2-

திரெங்கானு, பெசூட், பெர்ஹெண்டியன் தீவில் படகு கவிழ்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், படகை செலுத்திய ஓட்டுநரின் தடுப்புக்காவல், நாளை வரையில் மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

படகை செலுத்திய போது, அந்த 22 வயது உள்நாட்டவர் போதைப்பொருளை உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.

அதற்கு ஏதுவாக, அவரது தடுப்புக்காவலை நீட்டிக்க, பெசூட் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற மாஜிஸ்டுரேட் நுர்லியானா மாட் ஸுக்ரி இன்று அனுமதியளித்தார்.

spot_img

latest articles

explore more