கோலத்திரெங்கானு, ஜூலை 2-
திரெங்கானு, பெசூட், பெர்ஹெண்டியன் தீவில் படகு கவிழ்ந்து மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் பூர்த்தியாகும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
இதுவரையில், படகை செலுத்திய ஆடவர், அவரது அண்ணன், படகு விபத்தில் சிக்குண்டவர் என 22 முதல் 39 வயதுக்கு உட்பட்ட மூவரிடம் விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, திரெங்கானு போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மட் கைரி கைருடின் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு மணி 10.30 வாக்கில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பயணித்த படகு, மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கவிழ்ந்தது.
அதில், 40 வயது ஆறுமுகம் சக்திவேல், வெண்பனி விஜய ராஜ் (10), மற்றும் சார்விகா ஆறுமுகம் (3) ஆகிய மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும், ஆறு வயது சிறுவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


