கோலாலம்பூர், ஜூலை 2-
2015 செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராய்ஸை கொலை செய்து உடலை சிமெண்டு தோம்பில் அடைத்து கால்வாயில் தூக்கி வீசப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதில் காரணகர்த்தாவாக இருந்த ராணுவ டாக்டர் ஆர். குணசேகரனுக்கு மரண தண்டனையையும் எஸ்.நிர்மலன்(32), என்பவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 12 பிரம்படியையும் எஸ்.ரவிசந்திரன் (54) என்ற நபருக்கு 40 ஆண்டு சிறை தண்டனையையும் விதித்தது.
மேலும் ஆர். டினேஸ்வரன்(34), ஏகே தினேஸ் குமார்(32) மற்றும் எம். விஸ்வநாத் என்ற மூவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டோரின் மேல் முறையீட்டை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம், டாக்டர் குணசேகரன், நிர்மலன் மற்றும் ரவிசந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியதோடு, டினேஸ்வரன், தினேஸ் குமார் மற்றும் விஸ்வநாத் ஆகியோர் மீது உறுதியான ஆதாரம் இல்லையென்பதால் அவர்கள் மூவரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.
-பொன் முனியாண்டி


