Homeமலேசியாகாஸாவில் மனிதக்குலத்திற்கு எதிரான அட்டூழியம்; உலகநாடுகள் மௌனமாக இருக்கக்கூடாது. -அன்வார் 

காஸாவில் மனிதக்குலத்திற்கு எதிரான அட்டூழியம்; உலகநாடுகள் மௌனமாக இருக்கக்கூடாது. -அன்வார் 

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7-

காஸாவில் நடைபெறும் மனிதாபிமான குற்றங்களையும், ஈரானிய மக்கள் மீதான கொடுமைகளையும் உலகநாடுகள் புறக்கணிக்கக் கூடாது என மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய நீதியின் குரலாக எழுந்து, அனைத்து வகையான அடக்குமுறைகளையும் எதிர்த்து, BRICS அமைப்பு, மனித மாண்பை உயர்த்த வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17ஆவது BRICS உச்சி மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்று உரையாற்றிய போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உலகின் எதிர்காலம் பிரிவினைகளாலோ, புவிசார் அரசியல் மோதல்களாலோ கட்டுப்படுத்தப்படக் கூடாது.

மாறாக, நியாயமான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இலக்கவியல் எதிர்காலத்திற்காக, ஒத்துழைப்பு, பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றின் கீழ் அது வடிவமைக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறினார்.

பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள், மற்றும் நெறிமுறை அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஆளுகை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அம்மாநாடு நடைபெற்றது..

இவ்வாண்டு ஜூலை 3ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, காஸாவில் சுமார் 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

latest articles

explore more