பத்து காவான், ஜூலை 19- அரசாங்கத்தின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் அமைதிப் பேரணிகளை நடத்த அனுமதிக்கப்பட்டாலும் வெறுப்பை விதைத்து நாட்டில் கலகத்தையும் அமைதியைக் கெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து காவான் அரங்கத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வார கொண்டாட்டத்தில் உரையாற்றிய அன்வார், தம்மைப் பதவி விலக வலியுறுத்தும் அறைகூவலைத் தாம் மதிப்பதாகவும் ஆனால், அந்த அறைகூவல் நாட்டின் அமைதியைக் கெடுப்பதை அரசு அனுமதிக்காது என்றும் எச்சரித்தார்.
அரசுக்கு எதிரான பேரணிகள் யாவும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
-பொன் முனியாண்டி


