Homeமலேசியாஅன்வாருக்கு எதிரான பேரணி: ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கமுடையது! 

அன்வாருக்கு எதிரான பேரணி: ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கமுடையது! 

கோலாலம்பூர், ஜூலை 20-

அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று ஜூன் 26ஆம் தேதி நடத்தப்பட்ட எதிர்க்கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் பேரணி எதையும் சாதிக்கப் போவதில்லை என்று அமானாவின் தலைவர் முகமட் சாபு சுட்டிக் காட்டியுள்ளார்.

தமது காலத்தில் அப்போதைய அரசின் கொடுங்கோண்மையை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியதோடு, பல்வேறு சமயங்களில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப் பட்டதாகவும் ஆனால், அந்தப் போராட்டங்கள் எதுவும் ஆட்சியைக் கலைப்பதில் வெற்றி பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆட்சி கலைப்புக்கு பொதுத்தேர்தலே வழி சொல்லும் என்றும் ‘துருன் அன்வார்’ என்ற சுலோகம் நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

 

spot_img

latest articles

explore more