Homeஅரசியல்மஇகாவிற்கு அங்கீகாரமும் மரியாதையும் வழங்க வேண்டும்: தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

மஇகாவிற்கு அங்கீகாரமும் மரியாதையும் வழங்க வேண்டும்: தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷா ஆலம்:

கூட்டணியிலுள்ள கட்சிகள் மஇகாவிற்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்குவது அவசியம் என்று அக்கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கட்சி தொடங்கியது முதல் எல்லா சூழ்நிலைகளிலும் மஇகா அவர்களுக்குத் துணையாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் அவர் இன்று நடைபெற்ற மஇகாவின் 79-ஆவது பொதுப் பேரவையின் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதிலும் குறிப்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய முன்னணி, அம்னோ வீழ்ச்சியை சந்தித்தப்போதும் மஇகா தொடர்ந்து தேசிய முன்னணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அமைச்சரவையில் மஇகாவிற்கு பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து தங்களுக்குக் கவலை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தேசிய முன்னணி மஇகாவிற்கு உரிய மரியாதை வழங்க தவறியதைத் தொடர்ந்து மஇகா அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணக்கும் சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more