Homeமலேசியாபழங்குடியின ஆடவர் புலி தாக்கி உயிரிழப்பு

பழங்குடியின ஆடவர் புலி தாக்கி உயிரிழப்பு

ஈப்போ: திங்கட்கிழமை கம்போங் தாகுங், போஸ் பெர்வோர் அருகிலுள்ள வனப்பகுதியில் பிரம்பு தேடச் சென்ற 42 வயதுடைய பழங்குடி ஆடவர் புலி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர் ஸாம்பெரி அங்கா, 42 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹூத்தான் சிம்பான் கோர்பு வனப்பகுதிக்குள் நண்பர் ஒருவருடன் பிரம்பு தேடச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.

பின்னர், சம்பவம் இடம்பெற்றதாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், மரம் வெட்டும் பாதைக்கு அருகிலுள்ள மூங்கில் புதருக்குள் ஸாம்பெரி அங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

spot_img

latest articles

explore more