Homeஇந்தியா/ ஈழம்இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு பணம் செலுத்துவது இனி எளிதாகும்

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு பணம் செலுத்துவது இனி எளிதாகும்

கோலாலம்பூர்: இந்தியா செல்லும் மலேசியர்கள் அங்கு பணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், மலேசியாவின் DuitNow QR மற்றும் இந்தியாவின் UPI கட்டண முறைகளை இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடைகளின் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து மலேசியர்கள் நேரடியாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தேசிய கட்டண அமைப்பான National Payments Corporation of India (NPCI) மற்றும் மலேசியாவின் Payments Network Malaysia (PayNet) ஆகியவை இந்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக, இந்தியர்கள் மலேசியாவில் உள்ள DuitNow QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்தியா செல்லும் மலேசியர்கள் UPI மூலம் QR கட்டணங்களை மேற்கொள்ளும் வகையில் இரு நாடுகளின் கட்டண அமைப்புகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு சிறிது காலம் தேவைப்படுவதால், சேவை தொடங்கும் சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என NPCI ஆசிய பசிபிக் பிரிவு தலைவர் சோனல் அஸ்னானி தெரிவித்துள்ளார்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இலக்கவியல் கட்டண முறைகளில் ஒன்றாக UPI விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் மாதந்தோறும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், UPI கட்டண வசதி ஏற்கனவே சுமார் 11 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

மலேசியா–இந்தியா UPI இணைப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவுக்கு செல்லும் மலேசிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனைகள் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more