Homeசமூகம்சமூகம்குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கட்டும்! ராஜீவ் ரிக்ஷாகரன் வாழ்த்து

குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கட்டும்! ராஜீவ் ரிக்ஷாகரன் வாழ்த்து

கோலாலம்பூர்:

இத்தீபத் திருநாள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கக்கூடிய நாளாக அமையட்டும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிக்ஷாகரன் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.இத்திருநாளில் அனைவரின் உள்ளத்தில் அமைதியும் மனநிறைவும் தங்க வேண்டும் என்றார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு உறவுக்கும் நட்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஓர் உன்னத திருநாளாக தீபாவளி திகழ வேண்டும்.

சுற்றத்தார், நண்பர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் திருநாள் தீபாவளி.

இத்தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் ராஜீவ் தமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

spot_img

latest articles

explore more