தாம் பணியாற்றும் தைப்பிங் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தில்லக் ராமன்(38), ஜாலான் ஆயர் குனிங் பகுதியில் வேன் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
கீரிக் பகுதியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆறு ஓராங் அஸ்லி குடியிருப்பாளர்களை ஏற்றிச் சென்ற வேனுடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் அகால மரணம் தைப்பிங் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமல்லாது நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக முகநூலில் பதி விடப்பட்டுள்ளது. தைப்பிங் மருத்துவமனையின் சிறந்த குழந்தைகள் நல மருத்துவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் என்றும் அறியப்படுகிறது. அன்னாரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கு அனேகன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமது அன்பான சேவையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த டாக்டர் தில்லக் ராமன் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார். அநேகன் குழுமத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்


