HomeமலேசியாHRD விருதுகள் 2026: 53 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

HRD விருதுகள் 2026: 53 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

மனிதவள மேம்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் HRD விருதுகள் 2026-இன் 25-ஆம் ஆண்டு நிறைவு விழா பங்சாரில் நடைபெற்றது.

மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) ஏற்பாட்டில், மனிதவள அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற இவ்விழாவை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன்

கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விருது விழா, மனிதவள மேம்பாடு, பணியிடக் கற்றல் மற்றும் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்குவோரை அங்கீகரித்து வருகிறது.

மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது ஷாமிர் பின் அப்துல் அஜீஸ்

இவ்விழாவில் நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 53 விருதுகள் வழங்கப்பட்டன. அவை பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளாகும்.

இதில் மனிதவள அமைச்சர் விருது, மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கான மிக உயரிய அங்கீகாரமாக அமைந்தது.

மேலும், மலேசியாவின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற திறமையான மனிதவளத்தை உருவாக்குவதில் பயிற்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இவ்விழாவில் வலியுறுத்தப்பட்டது.

spot_img

latest articles

explore more