Homeவிளையாட்டுமாற்றுத் திறனாளிகளுக்கும் உடற்கட்டழகு போட்டியில் வாய்ப்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கும் உடற்கட்டழகு போட்டியில் வாய்ப்பு!

ஈப்போ

FIF Mr Perak 2026 உடற்கட்டழகு போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவும், Body Transformation பிரிவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

FIF Perak இயக்குநர் கலியப்பன் ரகுராமன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் பங்கேற்கும் 11 பேரும் ஒருவருக்கொருவர் போட்டியிடாமல், அனைவரும் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றார்.

அவர்களுக்கு கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் ஆதரவாளர்களின் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

ஒரே போட்டி பல பிரிவுகள்

Body Transformation பிரிவில் பங்கேற்பவர்கள், தங்களது முன்னும் பின்னுமான உடல் மாற்றத்தைக் காட்டும் 30 விநாடி வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், Men’s Classic, Men’s Physique, Jeans Model, First Timer, Novice மற்றும் Bodybuilder உள்ளிட்ட பிரிவுகளும் இடம்பெறுகின்றன.

பேராக் மாநில சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 8 கண்காட்சி அரங்குகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

@anegunnews

மாற்றுத்திறனாளிகளுக்கும் உடற்கட்டழகு போட்டியில் வாய்ப்பு – FIF Mr Perak 2026 FIF Mr Perak 2026 Opens Bodybuilding Competition to Persons with Disabilities #anegunnews #anegunmedia #peraknews

♬ original sound – AnegunNews – AnegunNews

spot_img

latest articles

explore more