Homeஅரசியல்முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்

முன்னாள் பிரதமர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியும், நாட்டின் முதல் மலாய்ப் பெண் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி இன்று தனது 100ஆவது வயதில் காலமானார்.

அவர் இன்று காலை சுமார் 9.25 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரான டாக்டர் சித்தி ஹஸ்மா, தாய்மார் நலம், குடும்பக் கட்டுப்பாடு, எழுத்தறிவு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநலம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல விவகாரங்களில் தீவிரமாகப் பணியாற்றினார்.

மகாதீரும் சித்தி ஹஸ்மாவும் 1947ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக இருந்தபோது சந்தித்தனர். 1956ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

மருத்துவத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்த காலத்தில், மருத்துவப் படிப்பை முடித்து முன்னோடியாகத் திகழ்ந்த சித்தி ஹஸ்மா, பல்வேறு சமூக மற்றும் சுகாதார அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மார்பகத்தில் கட்டி கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர், பெண்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

spot_img

latest articles

explore more