Homeமலேசியாடாக்சி ஓட்டுநர்களின் மிரட்டலுக்கு அரசாங்கம் பயப்படாது!

டாக்சி ஓட்டுநர்களின் மிரட்டலுக்கு அரசாங்கம் பயப்படாது!

கோலாலம்பூர், ஜன. 11-
பிரச்னைக்கு தீர்வு காணாபடாவிட்டால் வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என அரசாங்கத்திற்கு எதிராக வாடகை கார் ஓட்டுநர் சங்கங்கள் மிரட்டல் விடுக்கக்கூடாது என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

போக்குவரத்தின் பாதுகாப்பில் போக்குவரத்து அமைச்சர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். வாடகை கார் ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு அவர்களுடன் நேரடி சந்திப்பு நடத்தப்படும்.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்ஸ்ரீ சுக்ரி ஆகியோர் வாடகை கார் ஓட்டுநர்களை நேரில் சந்திப்பார்கள் என உள்துறை அமைச்சின் மாதந்திர சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு மிரட்டல் விடுக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு வரக்கூடிய மிரட்டலுக்கு நாங்கள் பயப்படவில்லை எனவும் உள்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் வாடகை கார் ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் பொது தேர்தலில் வாடகை கார் ஓட்டுநர்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படும் கருத்துகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வாடகை கார் ஓட்டுநர்களை விட உபர் மற்றும் கிரப் கார் ஓட்டுநர்களுக்குதான் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

spot_img

latest articles

explore more