Homeவிளையாட்டுஉலக டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் 5 ஆவது இடத்துக்கு சரிவு

உலக டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் 5 ஆவது இடத்துக்கு சரிவு

பாரீஸ். ஆக.1 – 
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 4 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.
உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை அனைத்துலக டென்னிஸ் சங்கம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்தில் தொடருகிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2 ஆவது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் கால்இறுதியில் வெளியேறிய செர்பியா வீரர் ஜோகோவிச் 4 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.
வரும் பருவத்தில்  எஞ்சியுள்ள போட்டிகளில் ஜோகோவிச் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் தர வரிசையில் மேலும் சரிவை சந்திக்க நேரிடும். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரே 3 இடம் முன்னேறி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஹம்பர்க் பொது டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற அர்ஜென்டினா வீரர் லீனார்டோ மேயர் 89 இடங்கள் ஏற்றம் கண்டு 49 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
spot_img

latest articles

explore more