Homeவிளையாட்டுவிரைந்து நடவடிக்கை எடுங்கள் - மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்துக்கு பெர்டினான்ட் கோரிக்கை !

விரைந்து நடவடிக்கை எடுங்கள் – மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்துக்கு பெர்டினான்ட் கோரிக்கை !

மென்செஸ்டர், அக்.1 –

மென்செஸ்டர் யுனைடெட் அணியில் நிலவி வரும் உட்பூசல்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் ரியோ பெர்டினான்ட் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோவின் எதிர்காலம் குறித்து அந்த கிளப்பின் நிர்வாகம் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1- 3 என்ற கோல்களில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டிடம் தோல்வி கண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வோல்வேர்ஹம்படனிடம் சமநிலைக் கண்ட மென்செஸ்டர் யுனைடெட், செவ்வாய்கிழமை டெர்பி கெளன்டியிடம் வீழ்ந்தது.

இதனால் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் மொரின்ஹோவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட்டின் போல் பொக்பா, அலெக்சிஸ் சன்சேஸ், லுக் ஷாவ், அந்தோனி மார்சியல் போன்ற ஆட்டக்காரர்களுடன் மொரின்ஹோவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அணியில் ஓர் இணக்கமான சூழல் நிலவவில்லை என கூறப்படுகிறது.

இந்த பருவம் முழுவதும் ஊடகங்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, ஆட்டக்காரர்களுடன் இணைந்து செயல்படாத பட்சத்தில் மொரின்ஹோவின் எதிர்காலம் குறித்து விரைந்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று பெர்டினான்ட் வலியுறுத்தினார். தற்போதைய நிலை தொடர்ந்தால் மென்செஸ்டர் யுனைடெட்டின் வரலாற்றில் மிக  மோசமான ஒரு பருவமாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.

2016 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பை ஏற்ற மொரின்ஹோ, முதல் பருவத்தில் யூரோப்பா லீக் மற்றும் லீக் கிண்ணங்களை வென்றார். கடந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மென்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்து எப்.ஏ கிண்ண இறுதி ஆட்டத்தில் செல்சியிடம் தோல்வி கண்டது.

spot_img

latest articles

explore more