Homeவிளையாட்டுஉலகத் தரத்திலான கால்பந்து பயிற்சி மையங்களை அமைக்க ஜே.டி.தி இலக்கு !

உலகத் தரத்திலான கால்பந்து பயிற்சி மையங்களை அமைக்க ஜே.டி.தி இலக்கு !

ஜோகூர் பாரு, அக்.2 –

ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பின் பயிற்சி மையங்களைப் போல், ஜோகூரிலும் அமைக்க ஜோகூர் டாரூல் தாசிம் கிளப்பின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஜே.டி.தி-யின் அதிகாரபூர்வ முகநூல் பக்கமான செளதர்ன் டைகர்சில் துங்கு இஸ்மாயில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

ஜோகூரில் நிர்மாணிக்கப்படும் புதிய அரங்கின் அருகில் ரியல் மாட்ரிட்டில் உள்ளது போல, கால்பந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிற்சி மையத்தில் பல்வேறு உலகத் தரத்திலான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என துங்கு இஸ்மாயில் கூறினார்.

இந்த பயிற்சி மையங்களில் ஜே.டி.தி கிளப்பின் அனைத்து வயது நிலையிலான குழுக்களும் பயிற்சி பெறும் என்று அவர் குறிப்பிட்டார். துங்கு இஸ்மாயிலின் இந்த கனவு நனவானால் , நாட்டின் கால்பந்து விளையாட்டுத்துறையில் ஜே.டி.தி மேலும் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more