Homeவிளையாட்டுமென்செஸ்டர் யுனைடெட் சரிவுக்கு மொரின்ஹோவை குறைக் கூறாதீர் - ஷாவ் !

மென்செஸ்டர் யுனைடெட் சரிவுக்கு மொரின்ஹோவை குறைக் கூறாதீர் – ஷாவ் !

மென்செஸ்டர், அக்.2-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடந்த வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தற்காப்பு ஆட்டக்காரர் லுக் ஷாவ் தெரிவித்துள்ளார்.  எனினும்  இந்த தோல்விக்கு நிர்வாகி ஜோசே மொரின்ஹோவைக் குறைக் கூறுவது சரியல்ல என லுக் ஷாவ் கூறினார்.

இந்த பருவத்தில் நடைபெற்ற ஏழு பிரீமியர் லீக் ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் மூன்று ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் 9 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. மென்செஸ்டர் யுனைடெட்டின் மோசமான ஆட்டத்தரத்துக்கு தாம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக லுக் ஷாவ் தெரிவித்தார்.

மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களின் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று லுக் ஷாவ் கூறினார். குறிப்பாக வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்கள் விளையாடவில்லை என லுக் ஷாவ் தெரிவித்தார்.

கடந்த 29 ஆண்டுகளில் மென்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீக் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நிர்வாகியை முழுமையாக குற்றஞ்சாட்ட முடியாது என ஷாவ் தெரிவித்துள்ளார். மென்செஸ்டர் யுனைடெட் பலம் வாய்ந்த ஓர் அணியைக் கொண்டிருந்தாலும் ஆட்டக்காரர்கள் திடலில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் , தோல்வி மட்டுமே மிஞ்சும் என அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more