Homeமலேசியா3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் வெளியேறினார் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் !

3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் வெளியேறினார் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் !

கோலாலம்பூர், அக்.26- 

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்த நிதி முறைக்கேடு தொடர்பில் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காலை 9.42 மணி அளவில் ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள மெனாரா கே.பி.ஜே வந்தடைந்த ரோஸ்மா மன்சோர் மூன்று மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பின்னர் மதியம் 1.08 மணி அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

ரோஸ்மா மன்சோருடன் அவரின் இரண்டு மகன்களான ரீசா அசிசும், நோர்ஷமன் நஜிப்பிடமும் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர்களுடன் இரண்டு வழக்கறிஞர்களும் உடனிருந்தனர். ரோஸ்மா மன்சோர் கேட்டு கொண்டதற்கு இணங்க வியாழக்கிழமை நடைபெற வேண்டிய விசாரணையை குற்றவியல் விசாரணைத் துறை வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்திருந்தது.

1 எம்.டி.பி உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தேசிய போலீஸ்படை துணைத் தலைவர் டான் ஶ்ரீ புசி ஹரூன் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த விசாரணைத் தொடர்பில் தகவல்களை சேகரிக்க 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், மெனாரா கே.பி.ஜே முன் திரண்டிருந்தனர்.

எனினும் மதியம் 1.08 மணி அளவில் பின்புற வழியாக ரோஸ்மாவும் அவரின் இரண்டு மகன்களும் காரில் அங்கிருந்து புறப்பட்டதை அடுத்து ஊடகவியலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

 

spot_img

latest articles

explore more