லண்டன், ஆக. 25-
சுவீடன் தாக்குதல் ஆட்டக்காரர் சிலாதான் இப்ராஹிமோவிச் காயத்தில் இருந்து பூரண குணமடைந்ததை அடுத்து அவரை மீண்டும் ஓராண்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்த இப்ராஹிமோவிச் 46 ஆட்டங்களில் 28 கோல்களைப் போட்டு அதிரடி படைத்தார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற யூரோப்பா லீக் கிண்ணப் போட்டியில் இப்ராஹிமோவிச் காயம் அடைந்தார்.
இதனையடுத்து இப்ராஹிமோவிச்சை ஜூன் மாதத்தில் ஒப்பந்தத்தில் இருந்து மென்செஸ்டர் யுனைடெட் விடுவித்தது. அவருக்குப் பதில் எவெர்டனில் இருந்து ரொமெலு லுக்காகூவை ஒப்பந்தம் செய்தது.
எனினும் சிலாதான் இப்ராஹிமோவிச் குணமடைந்து இருப்பதை அடுத்து அவரை மீண்டும் அணியில் இணைத்து கொள்ள நிர்வாகி ஜோசே மொரின்ஹோ முடிவு செய்துள்ளார். இப்ராஹிமோவிச்சுக்கு ஓராண்டுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.


