Homeசமூகம்கெடா மாநில முதல்வருக்கு - மலேசிய தமிழ்ச் சமய பேரவை கண்டனம்

கெடா மாநில முதல்வருக்கு – மலேசிய தமிழ்ச் சமய பேரவை கண்டனம்

கோலாலம்பூர், டிச. 7-

தமிழர் மரபு வழிபாட்டு தளத்தை இடித்ததை கேட்ட ம.இ.காவை குறை சொல்லி, தடை செய்ய சொன்ன கெடா மாநில முதல்வருக்கு மலேசிய தமிழ்ச் சமய பேரவையின் கண்டனத்தை அதன் தலைமை பொறுப்பாளர்களின் ஒருவருமான பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

காலனித்துவ ஆட்சியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் பழமை வாய்ந்த மரபுசார் வழிபாட்டு முனீசுவரர் திருக்கோவிலை இடித்து தள்ளியதுடன், அதற்கு நீதி கேட்ட ம.இ.காவை குறை சொல்வதுடன் அதை தடை செய்ய வேண்டும் என கூறும் கெடா மாநில முதல்வர் சனுசி முகமட் நோரின் பேச்சு அதிகார மீறல் கொண்டது என்றார்

பாசு கட்சியின் ஆட்சியில் இருக்கும் கெடா மாநிலத்தில் இத்தொடர் கோவில் உடைப்பை நியாப்படுத்துவதுடன், தன் தவற்றை மறைக்க ம.இ.கா ஒரு சட்ட விரோத கட்சி என முத்திரை குத்துவது வேடிக்கையாக இருக்கிறது

கோவில் உடைப்பது மட்டுமே தீர்வை தராது. உண்மையிலே தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால் மாற்று நிலம், தேவையான நிதி உதவி, போதுமான கால அவகாசம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், சமூதாய பிரதிநிதிகள் ஆகியோர் என முறையாக கலந்தாலோசிப்பது போன்ற சுமுகமான முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து சகட்டுமேனிக்கு பிற இன சமய தளங்களில் கைவைப்பதோ அதற்கு நீதி கேட்பவர்களை கலங்கப்படுத்துவதோ அல்ல.

கெடா மாநில முதல்வருக்கு ஒன்றை நினைவுற்துகிறோம். நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, ஏன் உங்கள் பிறப்புக்கு முன்பே ம.இ.கா எனும் அரசியல் கட்சி இந்த மண்ணில் வளர்ச்சிக்கும் நாட்டு மக்கள் நல்லிண மேன்மைக்கும் அளப்பரிய பங்காற்றி வருகிறது என்பதை அண்மையில் பதவியேற்ற கெடா மாநில முதல்வர் உணர வேண்டும்

ஏற்கனவே தமிழ்ப்பள்ளிகள், கோவில்கள் என தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியதுடன் முன்பு இதுபோல் வழங்கப்படவில்லை என இவர் பொய்யுரைத்ததை, மாநில ம.இ.கா முன்புள்ள அரசு வழங்கியதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பல இனம் வாழும் இத்திருநாட்டில் அவரவர் இன, மொழி, சமயம், போன்ற அரசியல் உரிமையை புறக்கணிப்பதும் கேவலப்படுத்துவதும் நல்லிணக்கத்தை உருவாக்காது. மூவின தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி நிர்வாகம் நடத்துவதே நல்ல மாநில முதல்வருக்கு அழகாகும். மாறாக தன்னின முதன்மை மட்டுமே பெரிதென இயங்குவது முதிர்ச்சியற்ற செயலாகும்.

ஆணவமாகவும், தன்முனைப்பாகவும், குறுகிய சிந்தனையுடனும் பிற இன உரிமையை மதிக்காது செயல்படும் கெடா மாநில முதல்வர் அந்த மாநில மூவின மக்களை பிரதிநிக்க தகுதியும் மற்ற கட்சிகளை பற்றி பேச உரிமையும் அற்றவர் என மலேசிய தமிழ்ச் சமய பேரவை கண்டனம் தெரிவிப்பதாக அதன் தலைமை பொறுப்பாளர்களின் ஒருவருமான பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

spot_img

latest articles

explore more