ஈப்போ, திசம்பர் 7:-
பேரா மாநில முதல்வராக பேரா அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ சாராணிக்கு ஆதரவாக 26 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியில் கையெழுத்து இட்டதாக அம்னோ வட்டாரத்தில் இருந்து தெரியவருகிறது.
பேரா மாநில 59 சட்டமன்றங்களில் அம்னோவிடம் 25 தொகுதிகளும், ஜ.செ.க.விடம் 16 தொகுதிகளும், பெர்சத்து 5, அமானா 5, பி.கே.ஆர். 3, பாஸ் 3, கெராக்கான் 1, சுயேட்சை 1 என்ற வரிசையில் அமைந்துள்ளது.
அந்த ஆதரவு உறுதி மொழிக் கையொப்பமிட பெர்சத்துவை அம்னோ சம்மதிக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
பேரா மாநிலத்தில் புதிய கூட்டணியின் வழி ஆட்சி அமைக்கப்போவதாக அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.
“நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இருந்தாலும், நாங்கள் அதே (தேசியக் கூட்டணி) அரசாங்த்தைத்தான் நிலை நிறுத்த முயற்சிக்கிறோம். ஒரு வேளை, முடியாமல் போனால், புதிய கூட்டணி அமையலாம்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


