ஈப்போ, திசம்பர் 7:-
பேரா மாநில அரசியல் நெருக்கடி குறித்து தன்னுடைய அலுவகம் மட்டுமே அறிக்கை வெளியிடும். எனவே, இந்தச் சூழலில் மற்றவர்கள் யாரும் கருத்தோ அறிக்கையோ வெளியிட வேண்டாம் என பேரா மாநில அம்னோவின் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ சராணி முகம்மாட் தெரிவித்துள்ளார்.
பேராவின் அரசியல் குறித்து வெளியிடப்படும் பல வதந்திகளையும் கருத்துகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எனவே, கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அனைவரும் சற்று அமைதியாக இருக்க வேண்டும் எனவும் தங்களின் அனுமானங்களின் அடிப்படையில் எவ்விதக் கருத்தையும் வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
இப்போது நடக்கின்ற அரசியல் நெருக்கடியில் இன்னும் எவ்விதத் தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.


