Homeஅரசியல்இன்று பெர்டானா புத்ராவில் பிரதமர் பணியைத் தொடங்கினார் இஸ்மாயில் சப்ரி !

இன்று பெர்டானா புத்ராவில் பிரதமர் பணியைத் தொடங்கினார் இஸ்மாயில் சப்ரி !

புத்ராஜெயா | 23/8/2021 :-

இன்று பெர்டனஆ புத்ராவில் உள்ளத் தமது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பிரதமர் பணியைத் தொடங்கினார் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

ஏறத்தாழ காலை 8.25 மணிக்கு பெர்டானா புத்ராவுக்கு வருகையளித்த நாட்டின் 9வது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தேசிய ஆரசாங்கச் செயலாளர் தான் ஶ்ரீ முகம்மட் ஸூக்கி அலி, பிரதமர் துறையின் துணைச் செயலாளர் டத்தோ ஜாமில் ராக்கோன் ஆகியோர் வரவேற்றனர்.

அவர்களுடன் பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ முகம்மட் கைருல் அடிப் அப்துல் இரகுமான், தேசிய வழக்கறிஞர் தான் ஶ்ரீ இட்ருஸ் ஹாருன், அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி, மலேசியப் போர்ப் படைத் தளபதி ஜெனரல் தான் ஶ்ரீ அஃபெண்டி புவாங் ஆகியோரும் இருந்தனர்.

பிரமர் துறை அலுவலகத்தின் அதிகாரி முகம்மட் ரேட்ஸா அகமாட் வாசித்த இறை வணக்கத்திற்குப் பிறகு பேரா (Bera) நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவ்வலுவலகத்தின் நல்வரவு புத்தக்கத்தில் கையொப்பமிட்டார்.

பிரதமர் பணீயைத் தொடங்கிய பின்னர், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பணி நிமித்தமாக கெடாவில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று கவனிக்க இருப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more