Homeசமூகம்நாளை நிறைவடைகிறது பன்னாட்டு புத்தக கண்காட்சி! குயில் ஜெயபக்தி புத்தகங்கள் உண்டு

நாளை நிறைவடைகிறது பன்னாட்டு புத்தக கண்காட்சி! குயில் ஜெயபக்தி புத்தகங்கள் உண்டு

கோலாலம்பூர், மே 31-

தலைநகர், உலக வாணிப மையத்தில் நடைபெற்று வரும் 258 நூல் நிறுவனங்களின் புத்தக கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

டேவான் மெர்டேக்கா அருகில் உள்ள கண்காட்சி கூடாரத்தில் குயில் ஜெயபக்தி புத்தகங்கள் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான தேர்வு புத்தகங்கள்,கதை, கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்கள் என தங்களுக்குத் தேவையான அனைத்து வகை நூல்களையும் இங்கு வாங்கிக் கொள்ளலாம் என்று ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ குறிப்பிட்டார் .

1,200 புத்தக முகப்பிடங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ்ப் புத்தக நிறுவனம் குயில் ஜெயபக்தி என்பதை அவர் சுட்டிக் காட்டினார் .

மே 23 ஆம் தேதி தொடங்கிய 42 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நாளை ஜூன் 1ஆம் தேதியோடு முடிவடைகிறது.

 

 

 

spot_img

latest articles

explore more