Homeசமூகம்தமிழ்ப்பள்ளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை வழங்கிய திட்டம் குறித்து கணக்காய்வு! -மித்ரா தகவல்

தமிழ்ப்பள்ளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை வழங்கிய திட்டம் குறித்து கணக்காய்வு! -மித்ரா தகவல்

புத்ராஜெயா, மே 31-

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு – மித்ராவின் கீழ், புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கிய திட்டம் குறித்து தேசிய கணக்காய்வு துறை, கணக்காய்வு செய்து வருகின்றது.

மித்ரா தலைவர் பி.பிரபாகரன், நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள  சந்திப்பில், அத்தகவலை வெளியிட்டார்.

பயன்படுத்தப்பட்ட அந்த மடிக்கணிணிகள் சரிச்செய்யப்பட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி, அந்த உதவித்திட்டம் குறித்த கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அறிக்கை, கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் கூறினார்.

வழங்கப்பட்ட மடிக்கணினிகள், தமிழ்ப்பள்ளிகளில் நடப்பில் வழங்கப்படும் கற்றல் கற்பித்தல் முறைக்கு உகந்ததாக இல்லையென, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கட்சியினரும் இதற்குமுன்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு, மித்ராவின் சிறப்பு பணிப்படைக் குழு தலைவராக, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் இருந்த போது, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான, மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

spot_img

latest articles

explore more